உலகின் மிக தொன்மையான நகரம் — மோட்சம் அருளும் தலம்
The world's oldest continuously inhabited city — the seat of moksha
Varanasi, Uttar Pradeshகாசி — இந்துக்களுக்கு மிக புனிதமான நகரம். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர் கி.மு. 1200-க்கும் முன்பாகவே மக்கள் வாழ்ந்த நகரமாக விளங்குகிறது. "கங்கை-வாரணை-அசி" என்ற இரண்டு நதிகளுக்கு இடையே அமைந்திருப்பதால் "வாரணாசி" என்று அழைக்கப்படுகிறது.
Kasi — the holiest city for Hindus. Situated on the banks of the Ganges, this city has been inhabited since before 1200 BCE. It derives the name "Varanasi" from the two rivers Varuna and Asi that flank it.
காசியில் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இங்கு காசி விஸ்வேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்), விசாலாட்சி அம்மன், அன்னபூரணி அம்மன் ஆகிய முக்கிய கோவில்கள் உள்ளன. மணிகர்ணிகா காட், தசாஸ்வமேத காட் ஆகிய புனித கடவுகள் கங்கைக்கரையில் அமைந்துள்ளன.
It is believed that those who die in Kasi attain moksha (liberation). Major temples here include Kashi Vishweshwara (a Jyotirlinga), Visalakshi Amman and Annapurni Amman. The sacred ghats of Manikarnika and Dashashwamedh line the Ganges riverfront.
இங்கு சத்திரம் உள்ளது: டி 36/17, 18 & 34/213, கோடவ்லியா, வாரணாசி – 221001 | ☎ 0542-2451804
Our chatram is here: D 36/17, 18 & 34/213, Godowlia, Varanasi – 221001 | ☎ 0542-2451804
விவரங்கள் காண்க View Detailsஇந்துக்களுக்கு மிக புனிதமான நதி — பாவங்களை கழுவும் தாய்
The holiest river for Hindus — the divine mother who washes away all sins
Originates at Gangotri, flows through UP, Bihar & West Bengalகங்கை இந்துக்களுக்கு மிக புனிதமான நதியாகும். இமயமலையில் கங்கோத்ரி என்னும் இடத்திலிருந்து உற்பத்தியாகும் கங்கை சுமார் 1557 மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கையின் மொத்த நீர்ப்பிடிப்பு பரப்பு 4,32,480 சதுர மைல்கள்.
The Ganga is the most sacred river for Hindus. Originating at Gangotri in the Himalayas, it flows approximately 1,557 miles before merging with the Bay of Bengal. Its total drainage basin spans 4,32,480 square miles.
கங்கை நதியில் ஸ்நானம் செய்வது பாவங்களை போக்கி மோட்சம் தருவதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையால், யாத்திரிகர்கள் காசி, அலகாபாத், ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் கங்கையில் ஸ்நானம் செய்கின்றனர். கங்கையில் பித்ரு தர்ப்பணம் செய்வது முன்னோர்களுக்கு நன்மை செய்வதாகவும் கருதப்படுகிறது.
Bathing in the Ganga is believed to wash away sins and grant moksha. This faith draws pilgrims to bathe at Kasi, Allahabad, Haridwar and Rishikesh. Performing pitru tarpana (ancestral offerings) in the Ganga is also considered greatly meritorious.
கங்கை வெறும் நதி மட்டுமல்ல — இது தாயாகவும், தெய்வமாகவும் வணங்கப்படுகிறது. "கங்காஸ்நானம்" வாழ்க்கையில் ஒரு முறையாவது செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Ganga is not merely a river — she is worshipped as a mother and a deity. The scriptures declare that every Hindu should bathe in the Ganga at least once in their lifetime.
கங்கை நீர் வீட்டில் வைத்திருக்கவும் புனிதமானது. யாத்திரிகர்கள் காசியிலிருந்து கங்கை நீர் தங்கள் ஊருக்கு கொண்டு செல்கின்றனர்.
Ganga water is considered sacred even at home. Pilgrims carry Ganga water back to their hometowns as a blessing from Kasi.
திரிவேணி சங்கமம் — மூன்று நதிகளின் புனித சந்திப்பு
Triveni Sangam — the sacred confluence of three rivers
Prayagraj, Uttar Pradeshபிரயாக்ராஜ் (அலகாபாத்) — கங்கை, யமுனை மற்றும் கற்பனையான சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் நடைபெறும் புண்ணிய தலம். இந்த மூன்று நதிகளின் சங்கமம் "திரிவேணி சங்கமம்" என்று அழைக்கப்படுகிறது.
Prayagraj (Allahabad) is the sacred site where the Ganga, Yamuna and the mythical Saraswati rivers converge. This confluence is called the "Triveni Sangam" — considered among the most auspicious spots in all of India.
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கு மகா கும்ப மேளா நடைபெறுகிறது. கும்ப மேளாவில் கோடிக்கணக்கான யாத்திரிகர்கள் சங்கமத்தில் ஸ்நானம் செய்கின்றனர். பித்ரு காரியங்களுக்கும் இது மிக முக்கியமான இடம்.
The Maha Kumbha Mela is held here every 12 years, drawing hundreds of millions of pilgrims. Bathing at the Sangam during Kumbha Mela is considered supremely auspicious. It is also a vital site for ancestral rites (pinda daan).
இங்கு சத்திரம் உள்ளது: எண்.148, மோரி தாரகஞ்ச், அலகாபாத் – 221006 | ☎ 0532-2501275
Our chatram is here: No.148, Mori Daraganj, Allahabad – 221006 | ☎ 0532-2501275
விவரங்கள் காண்க View Detailsஇராமாயணத்தின் நாயகன் இராமபிரானின் பிறந்த ஊர்
The birthplace of Lord Rama — hero of the Ramayana
Ayodhya, Uttar Pradeshஅயோத்தி — இந்துக்களின் ஏழு மோட்ச புரங்களில் ஒன்று. சரயு நதிக்கரையில் அமைந்த இந்நகர் இராமாயணத்தின் நாயகன் இராமபிரானின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது.
Ayodhya — one of the seven Moksha Puris (cities of salvation) for Hindus. Located on the banks of the Sarayu river, this city is believed to be the birthplace of Lord Rama, the hero of the Ramayana.
ராம ஜன்மபூமி கோவில் 2024-ல் புதுப்பிக்கப்பட்டு யாத்திரிகர்களுக்கு திறக்கப்பட்டது. கனக் பவன், ஹனுமான் கர்ஹி, சரயு நதி ஸ்நானம் ஆகியவை அயோத்தி யாத்திரையின் முக்கிய அம்சங்கள்.
The Ram Janmabhoomi Temple was newly consecrated in 2024. Kanak Bhavan, Hanuman Garhi and bathing in the Sarayu river are key aspects of the Ayodhya pilgrimage.
இங்கு சத்திரம் உள்ளது: எண்.21/2/7, மொஹல்லா பாபூ பஜார், அயோத்தி – 224123 | ☎ 05278-232703
Our chatram is here: No.21/2/7, Mohalla Baboo Bazar, Ayodhya – 224123 | ☎ 05278-232703
விவரங்கள் காண்க View Detailsமுன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்யும் புண்ணிய தலம்
The sacred site of pinda daan for ancestral liberation
Gaya, Biharகயா — முன்னோர்களுக்கு பித்ரு காரியங்கள் (பிண்ட தானம்) செய்வதற்கு மிக முக்கியமான தலம். பல்கு நதிக்கரையில் அமைந்த இந்நகரில் விஷ்ணு பாதாலயம் என்ற புகழ்பெற்ற கோவில் உள்ளது.
Gaya is the most important pilgrimage site for performing pitru karya (ancestral rites including pinda daan). Located on the banks of the Phalgu river, it is home to the famous Vishnupad Temple.
கயாவில் பிண்டம் வைப்பது முன்னோர்களுக்கு மோட்சம் தருவதாக நம்பப்படுகிறது. 45 ஆண்டுகால பிண்ட தான விரதத்திற்கு கயாவில் செய்யும் ஒரு பிண்டம் சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இராமாயணத்தில் சீதா தேவி தனது மாமியாரின் ஆத்மாவிற்காக இங்கே பிண்டம் வைத்தாக கூறப்படுகிறது.
Offering pinda at Gaya is believed to grant salvation to one's ancestors. The scriptures declare that a single pinda offered at Gaya equals 45 years of annual pinda daan. In the Ramayana, Sita Devi is said to have offered pinda here for her father-in-law Dasharatha.
இங்கு சத்திரம் உள்ளது: எண்.171, சந்த் சௌராஹா, கயா – 823001 | ☎ 0631-2226480
Our chatram is here: No.171, Chand Chowra, Gaya – 823001 | ☎ 0631-2226480
விவரங்கள் காண்க View Detailsகோதாவரி நதிக்கரையில் அமைந்த இராமாயண புண்ணிய தலம்
A Ramayana pilgrimage site on the banks of the Godavari
Nasik, Maharashtraநாசிக் — கோதாவரி நதிக்கரையில் அமைந்த இந்த புண்ணிய நகர், இராமாயண காலத்தில் ராமன், சீதை, லட்சுமணன் வனவாச காலத்தில் வாழ்ந்த பஞ்சவடி என்று நம்பப்படுகிறது. கோதாவரி ஸ்நானம் மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது.
Nasik — located on the Godavari river, this sacred city is believed to be the Panchavati of the Ramayana where Rama, Sita and Lakshmana lived during their forest exile. A bath in the Godavari here is considered highly auspicious.
கும்ப மேளா நடைபெறும் நான்கு தலங்களில் ஒன்று நாசிக். ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இங்கு கும்ப மேளா நடைபெறுகிறது. இது பித்ரு காரியங்களுக்கும் முக்கியமான தலம்.
Nasik is one of the four sites for the Kumbha Mela, held every 12 years. It is also an important site for ancestral rites, and a visit here is combined with the Kasi-Gaya pilgrimage by many devotees.
இங்கு சத்திரம் உள்ளது: சனிச்சவுக், பஞ்சவடி, நாசிக் – 422003 | ☎ 0253-2620878
Our chatram is here: Shanichowk, Panchavati, Nasik – 422003 | ☎ 0253-2620878
விவரங்கள் காண்க View Detailsநாட்டுக்கோட்டை நாகரத்தாரால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம்
The temple built and maintained by Nattukottai Nagarathar community
Strand Road, Kolkata, West Bengalகொல்கத்தாவின் ஸ்ட்ராண்ட் தெருவில் 35 நிலை கட்டிடத்தில் அமைந்த நகரேசுவரர் கோவில் நாட்டுக்கோட்டை நாகரத்தாரால் நிர்மாணிக்கப்பட்டது. 1921-ல் இந்தக் கோவில் கட்டப்பட்டது. ஆண்டு முழுவதும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
The Nagaresvara Temple, located in a 35-floor building on Strand Road in Kolkata, was built by the Nattukottai Nagarathar community. Constructed in 1921, it conducts year-round pujas and is a vital religious centre for Nagarathars in Eastern India.
இரண்டு கொடி பூஜை நாட்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன. நவகிரக வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது. கொல்கத்தா நகரத்தில் யாத்திரையின்போது நாகரத்தார்கள் இங்கு தங்குகின்றனர்.
Special celebrations are held on two flag-raising days. Navagraha worship is also specially conducted. Nagarathars visiting Kolkata as part of their pilgrimage circuit stay at the chatram here.
இங்கு சத்திரம் உள்ளது: நாகரத்தார் ஹவுஸ், எண்.34, எஸ்ரா தெரு, கொல்கத்தா – 700001 | ☎ 033-22350052
Our chatram is here: Nagarathar House, No.34, Ezra Street, Kolkata – 700001 | ☎ 033-22350052
விவரங்கள் காண்க View Detailsமேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற சிவலிங்க தலம்
The famous Shivalinga pilgrimage site of West Bengal
Tarakeshwaram, Hooghly District, West Bengalதாரகேஸ்வரம் — கொல்கத்தாவிலிருந்து மின்சார ரயிலில் 36 மைல் தொலைவில் உள்ள புண்ணிய தலம். தாரகேஸ்வர மஹாதேவர் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் மிக பிரசித்தி பெற்றது. யாத்திரிகர்கள் சிவலிங்கத்தின் மீது பால் ஊற்றி வழிபடுவது சிறப்பு.
Tarakeshwaram is a sacred site 36 miles from Kolkata by electric train. The Shivalinga here, known as Tarakeshwara Mahadeva, is very famous. Pilgrims pour milk over the lingam as a special form of worship.
இந்த தலத்தில் உள்ள சிவலிங்கம் தானே தோன்றிய (ஸ்வயம்பு) லிங்கம் என்று நம்பப்படுகிறது. கொல்கத்தா யாத்திரையுடன் சேர்த்து தாரகேஸ்வரமும் சேர்த்து வழிபடுவது நாகரத்தார்களின் பாரம்பரியம்.
The Shivalinga here is believed to be a svayambhu (self-manifested) lingam. It is a Nagarathar tradition to combine a visit to Tarakeshwaram with the Kolkata visit as part of the Eastern India pilgrimage circuit.
இங்கு சத்திரம் உள்ளது: செட்டிபாடி, தாரகேஸ்வரம் – 712410, மேற்கு வங்கம் | ☎ 0321-2278052
Our chatram is here: Chettipady, Tarakeshwaram – 712410, West Bengal | ☎ 0321-2278052
விவரங்கள் காண்க View Details